[X] Close

400 கி.மீ, ஐந்தரை மணிநேர பயணம்: பச்சிளங் குழந்தை உயிர் காக்க சாலையை ஒதுக்கிய கேரள மக்கள்


400

  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 11:28 am
  • அ+ அ-

-பி.டி.ஐ.

பிறந்த 15 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக 400 கி.மீ சாலையை ஐந்தரை மணிநேரத்தில் ஆம்புலன்ஸ் கடக்க எந்தவிதமான இடையூறும் இன்றி கேரள மக்கள் ஒதுக்கிக்கொடுத்து உயிரைக்காக்க உதவியுள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயனும் தனிப்பட்ட முறையில் மக்களுக்கு ட்விட் செய்து, ஒவ்வொரு  நொடியும் விலைமதிப்புள்ளது. அந்த குழந்தை உரிய நேரத்தில் மருத்துவமனையை அடைய கேரள மக்கள் ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என்றுக் கேட்டுக் கொள்கிறேன் " என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதயவால்வில் பிரச்சினை உள்ள அந்த குழந்தையை முதலில் மருத்துவர்கள், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்தனர். ஆனால், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தலையிட்டு கொச்சியில் உள்ள அமிர்தா பன்னோக்கு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவமனைக்கு மங்களூருவில் இருந்து குழந்தையை  எடுத்துச் செல்ல ஏறக்குறைய 12 மணிநேரம் ஆகும். அது குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக நேரலாம். ஆதலால், கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் சேருங்கள் என்று குழந்தையின் உறவினர்களை அமைச்சர் சைசலஜா டீச்சர் சமாதானப்படுத்தி, குழந்தை பாதுகாப்பாக சாலை மார்க்கம் செல்ல வழி செய்தார்.

காசர்கோட்டைச்  சாய்னா, மிதார் தம்பதிக்கு பிறந்து 15 நாள் ஆன பச்சிளங் குழந்தைக்கு இதய வால்வில் குறைபாடு இருந்தது மங்கலூரு மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைக்கு இதயவால்வு அறுவை சிகிச்சையை முடிந்தவரை விரைவாக செய்வது உயிரைக் காக்க உதவும் என்று மருத்துவர்கள் ஆலோசித்தனர்.

 திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவமனையில்  குழந்தையை சேர்த்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால், விமானம் மார்க்கமாக குழந்தையை கொண்டு சென்றால் விமானத்தில் உள்ள அழுத்தம், குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என்பதால், சாலை மாரக்கமே சிறந்தது என மருத்துவர்கள் தீர்மானித்தனர்.

இதையடுத்து, சாலையை விரைவாக கடப்பதற்கு கேரள அரசிடம் மருத்துவர்கள், குழந்தையின் பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விஷயத்தில் உதவிய சுதாகாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர், குழந்தை நீண்டதொலைவு பயணிப்பது உயிருக்கு ஆபத்தாக முடியலாம். கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் சேர்த்து அரசு சார்பில் ஹிருதயம் திட்டம் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அரசின் ஆலோசனைப்படி, நேற்று காலை 11 மணி அளவில் மங்களூருவில் இருந்து குழந்தையுடன் மருத்துவர்கள் குழு கொச்சி நகருக்கு புறப்பட்டது.

குழந்தையை பாதுகாப்பாகவும், விரைவாகவும் கொண்டு செல்ல உதவுங்கள் சாலையில் இடையூறு செய்யாதீர்கள் என்று கேரள அரசு அதிகாரிகள், பொதுமக்கள், போலீஸார் என அனைவரும் சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்தனர்.

காலை 11 மணிக்கு மங்களூரு மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் சராசரியாக 80 கி.மீ வேகத்தில் சென்று 400 கி.மீ தொலைவை ஐந்தரை மணிநேரத்தில் அதாவது மாலை 4.30 மணிக்கு கொச்சி  சென்றடைந்தது.

சாலையில் ஆம்புலன்ஸ் செல்வது ஃபேஸ்புக்கில் லைவ் செய்யப்பட்டதால், மக்கள் அனைவரும் சாலையை தாங்களாகவே முன்வந்து ஒதுக்கிக்கொடுத்து ஆம்புலன்ஸ் விரைவாக கடக்க உதவினார்கள்.சாலை மார்க்கமாக குழந்தை வேகமாக கடக்க சைல்ட் புரடெக்ட் டீம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் உதவியது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close