[X] Close

அரசியல் கட்சிகளின் ஆன்லைன் விளம்பர செலவு இரட்டிப்பாகிறது


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 07:58 am
  • அ+ அ-

கட்சிகளின் ஆன்லைன் விளம்பரச் செலவு கடந்த 2014 தேர்தலுடன் ஒப்பிடும்போது இம்முறை ரூ. 400 500 கோடியாக, அதாவது இரட்டிப் பாக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விளம்பரத்துறை நிபுணரும் ‘டென்ட்சு ஏஜிஸ் நெட்வொர்க்’ என்ற நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆசிஷ் பாசின் கூறும்போது, “2019 பொதுத் தேர்தலில் பிரச்சாரத்துக்கான மொத்த விளம்பரச் செலவு ரூ.2,500 3,000 கோடியாக வாய்ப் புள்ளது. இதில் சமூக ஊடகம் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களுக் கான விளம்பரச் செலவு ரூ.500 கோடியாக வாய்ப்புள்ளது” என்றார்.

விளம்பரத் துறையின் மற் றொரு நிபுணர் கூறும்போது, “கடந்த 5 ஆண்டுகளில் ஸ்மார்ட் ஃபோன் விற்பனை பெருமளவு அதிரித்துள்ளதால் அரசியல் கட்சிகளின் ஆன்லைன் விளம்பரச் செலவு பட்ஜெட் இம்முறை இரட்டிப்பாகியுள்ளது” என்றார்.

கூகுள் நிறுவனத்தின் விளம்பர அறிக்கையின்படி, அதன் பல்வேறு டிஜிட்டல் தளங்களில் இந்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் கட்சிகளின் மொத்த விளம்பரச் செலவு ரூ.8 கோடியே 63 லட்சத்து 11,600-ஐ கடந்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close