[X] Close

பாஜகவில் இணைந்த மகனுக்காக பிரச்சாரம் செய்யும் மகாராஷ்டிர காங். தலைவர்


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 07:55 am
  • அ+ அ-

பாஜகவில் இணைந்து போட்டியிடும் மகனுக் காக மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராதாகிருஷ்ண விகே பாட் டீல் பிரச்சாரம் செய்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட டிக்கெட் தராத தால், ராதாகிருஷ்ண பாட்டீலின் மகனான சுஜாய் விகே பாட்டீல், அண்மை யில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு அகமது நகர் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்புக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் பாஜக சார் பில் போட்டியிடும் மகனுக்காக தனது பங்களாவில் நூற்றுக் கணக்கான விவசாயிகளை அழைத்து பிரச்சாரம் செய்துள் ளார் ராதாகிருஷ்ண பாட்டீல்.

அவரது பங்களா, ரகுரி பகுதியில் அமைந்துள்ளது. நிகழ்ச்சியை பதிவு செய்ய முயன்ற தனியார் தொலைக் காட்சி பத்திரிகையாளர்களை யும் ராதாகிருஷ்ண பாட்டீலின் ஆதரவாளர்கள் மிரட்டி அனுப்பிவிட்டனர்.

இதுகுறித்து ராதாகிருஷ்ண பாட்டீல் கூறியதாவது: நான் இப்போதும் காங்கிரஸில்தான் இருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட பலத்தைக் காண்பிப் பதற்காக நான் இந்தக் கூட்டத்தை நடத்தினேன். இதுதொடர்பாக காங்கிரஸ் மேலிடத்துக்கும் நான் தெரிவித்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close