[X] Close

தேர்தல் ஆணையத்தின் நன்மதிப்பை குலைக்க முயற்சி: குடியரசுத் தலைவருக்கு முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம்


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 07:47 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

தேர்தல் ஆணையத்தின் நன்மதிப் பையும், சுதந்திரத்தையும் குலைக் கும் வகையிலான நடவடிக்கைகள் குறிப்பிட்ட சிலரால் நடத்தப்பட்டு வருகின்றன என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

இதுதொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், ராணுவத்தினர், நீதிபதிகள், கல்வியாளர்கள் என 80 பேரின் கையொப் பத்துடன் கூடிய கடிதம், குடி யரசுத் தலைவருக்கு நேற்று அனுப்பப்பட்டது. அதில் கூறப்பட் டுள்ளதாவது:தேர்தல் ஆணையத்தின் மீது சமீபகாலமாக அடிப்படையற்ற மற்றும் உள்நோக்கத்துடன் கூடியகுற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. மேலும், தேர்தல் ஆணையத் தால் நியாயமான தேர்தலை நடத்த முடியுமா என்ற சந்தேகங்களையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.

இது, தேர்தல் ஆணையத்தின் நற்பெயரையும், நன்மதிப்பையும் சீர்குலைக்கும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது. ஏனெனில், நமது தேர்தல் ஆணையம் நீண்டகாலமாக பல தேர்தல்களை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தி வந்த அமைப்பாகும். நடவடிக்கை வேண்டும்மேலும், அதன் நம்பகத் தன்மை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. எனவே, தேர்தல் ஆணையத் தின் சுதந்திரத்தையும், நற்பயெரையும் சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுவோர் மீதுதக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close