[X] Close

திரிணமூல் காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்த வங்கதேச நடிகர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 07:43 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக மேற்கு வங்க மாநிலத்தில் பிரச்சாரம் செய்த புகழ்பெற்ற வங்கதேச நடிகர் பிர்தோஸ் அகமது நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் இந்தியாவுக்கு பிஸினஸ் விசா மூலம் இந்தியாவுக்கு வந்தார் நடிகர் பிர்தோஸ் அகமது. இந்நிலையில் கொல்கத்தா வந்த அவர், திரிணமூல்காங்கிரஸ் கட்சிக்காக கொல்கத்தா வின் பல்வேறு இடங்களில் கட்சித் தலைவர்களுடன் இணைந்து பிரச்சாரம் செய்தார். இதையடுத்து இது தேர்தல் விதிமீறல் என்று தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் செய்தது.

இதையடுத்து இதுதொடர் பாக அறிக்கை தருமாறு கொல் கத்தாவிலுள்ள மண்டல பதிவு அதிகாரிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

அவரது அறிக்கை கிடைத்ததைத் தொடர்ந்து பிர்தோஸ் அகமது விசா விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளதை மத்திய குடியுரிமைப் பிரிவு கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து அவரது விசாவை ரத்து செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. மேலும் அவர் நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது.

கருப்பு பட்டியலிலும் பிர்தோஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளதால், அவர் எதிர்காலத்தில் இந்தியா வுக்கு வருவதிலும் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close