[X] Close

மோடி அவதாரம் யோகி: உமா பாரதி பாராட்டு


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 09:06 am
  • அ+ அ-

மத்திய அமைச்சர் உமா பாரதி,அவரது சொந்தத் தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில், பாஜக வேட்பாளரும், ஆயுர்வேதா நிறுவன நிர்வாக இயக்குநருமான அனுராக் சர்மாவுக்காக வாக்குகளை சேகரித்து வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் உமா பாரதி கூறியதாவது: அனுமன், சே குவேரா, வீர சிவாஜி ஆகியோரது கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டேன். அதனால்தான் நான் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்தேன்.

அதுபோலவே எல்.கே.அத்வானி, பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோராலும் ஈர்க்கப்பட்டேன். உ.பி.யில் மிகச் சிறந்த பணிகளை முன்னெடுத்து வருகிறார் யோகி. பிரதமர் மோடியின் இளைய அவதாரமாகத் திகழ்கிறார் யோகி ஆதித்யநாத்.

இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் கங்கை புனரமைப்புத் திட்டத்துக்காக பணியாற்றப் போகிறேன். அதே நேரத்தில் 2022 உ.பி. பேரவை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்றும் சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close