[X] Close

உயிருக்கு ஆபத்து: நடிகை ஊர்மிளா புகார்


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 09:05 am
  • அ+ அ-

பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர், வடக்கு மும்பை மக் களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு வரும் 29-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையொட்டி ஊர்மிளா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது பாஜக தொண்டர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற் படுகிறது. இதுதொடர்பாக மும்பை போலீஸில் ஊர்மிளா நேற்று புகார் மனு அளித்தார். இதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

எனது பிரச்சாரத்தின்போது பாஜகவினர் இடையூறு செய்கின்றனர். அநாகரிகமாக ஆடுகின்றனர். அவதூறாக பேசுகின்றனர். என் பிரச்சாரத்தில் பங்கேற்கும் பெண்களை பய முறுத்துகின்றனர். எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் போலீஸில் புகார் அளித்துள்ளேன். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்வேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close