[X] Close

‘பி.எம். நரேந்திர மோடி’ படத்தை பார்த்துவிட்டு முடிவு எடுங்கள்: ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 09:01 am
  • அ+ அ-

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மோடி கதா பாத்திரத்தில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்தப் படம் நாடு முழுவதும் கடந்த 11-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறும் நாளில் வெளியாகவிருந்தது. ஆனால் தேர்தல் நேரத்தில் இது மக்களை திசை திருப்பும் செயல் என எதிர்க்கட்சிகள் புகார் அளித்ததால், படத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத் தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் முறையிட்டனர். அவர்கள் தங்கள் மனுவில், “இந்தப் படத்தின் சுருக் கமான டிரெய்லர் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு எடுத் துள்ளது. ஆணையத்தின் தடை, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத் திற்கு எதிரானது” என்று தெரிவித்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமை யிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு முறை ஆராய வேண்டும். திரைப் படத்தை அனுமதிக்கலாமா அல் லது வேண்டாமா என்று முடிவு எடுக்கும் முன் அதனை தேர்தல் ஆணையம் முழுவதும் பார்க்க வேண்டும். தயாரிப்பாளரின் கருத்தை அறியவேண்டிய தேவை ஏற்பட்டால், அதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும். தேர்தல் ஆணை யம் தனது முடிவை சீலிட்ட உறையில் வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கை வரும் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close