[X] Close

தலாய் லாமா தெரியும், 'த லை லாமா' தெரியுமா?- தலைநகரை திணறவைத்த போஸ்டர்


pm-modi-targeted-with-the-lie-lama-posters

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 May, 2018 11:42 am
  • அ+ அ-

தலைநகர் டெல்லியில் மந்திர் மார்க் பகுதியில் கடந்த வியாழக்கிழமை சுவர்களில் கறுப்பு வெள்ளையில் சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டரில் இருந்தது பிரதமர் நரேந்திர மோடியின் படம். பிரச்சினை அதுவல்ல. படத்துக்கு மேல் 'த லை லாமா' (The Lie Lama) என எழுதப்பட்டிருந்ததே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்த போஸ்டர் குறித்து தகவலறிந்த போலீஸார் உடனடியாக மந்திர் மார்க் பகுதிக்கு விரைந்து ஆட்களைக் கொண்டு போஸ்டர்களை கிழித்தனர். அப்புறம்தான் அவர்களுக்குத் தெரிந்தது மந்திர் மார்க் மட்டுமல்ல மத்திய டெல்லிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன என்பது. இதே போஸ்டர் சமூக வலைதளங்களிலும் உலா வருகிறது.

அதில், மோடி பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக சிலர் கருத்து தெரிவித்து போஸ்டரைப் பகிர்ந்திருந்தனர்.
மந்திர் மார்க் பகுதியில் அரசு கட்டிடச் சுவர்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததால் போலீஸார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மந்திர் மார்க் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close