[X] Close

பகுஜன் சமாஜ் கட்சியின் 16 வேட்பாளர்கள் அறிவிப்பு


16

  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 09:11 am
  • அ+ அ-

உத்தரபிரதேசத்தில் 16 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.

உ.பி.யில் அகிலேஷ் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. மக்களவைக்கு கடந்த 11-ம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலின்போது உ.பி.யிலும் தேர்தல் நடந்தது. மேலும் 6 கட்ட தேர்தல்கள் நடக்க உள்ளன. இந்நிலையில், 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயரை பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. காஜிப்பூர், சுல்தான்பூர், பிரதாப்கர் உள்ளிட்ட 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் காஜிப்பூர் தொகுதியில் அப்சல் அன்சாரி என்பவர் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட உள்ளார். இவர் அடிதடி, கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டு சிறையில் உள்ள முக்தார் அன்சாரி என்பவரின் சகோதரர் ஆவார். உ.பி.யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இக்கூட்டணியில் 3 இடங்களில் ஆர்எல்டி போட்டியிடுகிறது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை.

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close