[X] Close

பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு 99 சதவீதம் தேர்தல் நன்கொடை: ஆர்டிஐயில் தகவல்


99

  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 09:00 am
  • அ+ அ-

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை செலுத்த விரும்புவோருக்கு வசதியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரையிலான நன்கொடை பத்திரங்களை வெளியிட்டது. கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் இந்த பத்திரங்களை வாங்கிக் கொடுக்கலாம். கட்சிகள் பெறும் நன்கொடை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க இந்தப் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுட் என்பவர் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த தகவலை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் கோரியிருந்தார். இதில் மார்ச் 2018 முதல் ஜனவரி 24 வரை அரசியல் கட்சிகள் 99.8 சதவீத நன்கொடையை தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இந்த கால கட்டத்தில் நன்கொடையாளர்கள் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 1,459 தேர்தல் நன்கொடை பத்திரங்களையும் ரூ.1 கோடி மதிப்புள்ள1,258 பத்திரங்கள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள 318 பத்திரங்கள், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 12 பத்திரங்கள், ரூ.1,000 மதிப்புள்ள 24 பத்திரங்களையும் வாங்கியுள்ளனர். தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு ரூ.1,395.89 கோடி நிதி கிடைத்திருப்பதும் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close