[X] Close

சீனாவை விட 2 மடங்கு வேகத்தில் பெருகி வரும் இந்தியாவின் மக்கள் தொகை: ஐ.நா. அறிக்கையில் தகவல்


2

  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 07:26 am
  • அ+ அ-

சீனாவை விட 2 மடங்கு வேகத்தில் இந்தியாவின் மக்கள்தொகை பெருகி வருவதாக யுஎன்எப்பிஏ அறிக்கை தெரிவித்துள்ளது.

உலக மக்கள்தொகை குறித்த ஆய்வுகளை யுஎன்எப்பிஏ அமைப்பு செய்து வருகிறது. அந்த அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக எடுத்த கணக்கெடுப்பில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

2018-ல் உலக மக்கள்தொகையானது 760 கோடியாக இருந்தது. இது 2019-ல் 770 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை 2010 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உலக அளவிலான சராசரி மக்கள் தொகை அதிகரிப்பு விகிதமான 1.1 சதவீதத்தை விட அதிகமாகும். ஆனால் சீனாவில் மக்கள் தொகை அதிகரிப்பு 0.5 சதவீதமாகும். எனவே சீனாவை விட 2 மடங்கு வேகத்தில் இந்தியாவின் மக்கள்தொகை பெருகி வருகிறது.

இதுகுறித்து யுஎன்எப்பிஏ இந்தியாவுக்கான அதிகாரி கிளாஸ் பெக் கூறும்போது, “இந்தியாவில் அதிக குழந்தைகள் பிறக்கும் அதேநேரத்தில் வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள இளைஞர்கள் படிப்பாளிகளாகவும் உடல்நலமிக்கவர்களாகவும் நாட்டின் பொருளாதாரம் வளர சமூகத்துக்கு நல்ல பங்களிப்பு தருபவர்களாகவும் முதியவர்களின் நலனில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பதை அரசு உறுதிசெய்யவேண்டும். அதற்காக முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளை மற்ற நாடுகள் எப்படி சமாளித்தன என்பதை இந்தியா கற்றுக்கொள்ளவேண்டும்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close