[X] Close

தீவிரவாதிகளைத் துரத்திய போலீஸ் அதிகாரியை கேன்சர் துரத்திய பரிதாபம்


high-profile-mumbai-police-officer-himanshu-roy-allegedly-commits-suicide

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 May, 2018 16:49 pm
  • அ+ அ-

ஹிமான்சு ராய். இவர், மும்பை நகரின் பல முக்கிய வழக்குகளை லாவகமாக புலன் விசாரணை செய்து உண்மையை புலப்படச் செய்தவர். இளம் அதிகாரிகள் பார்த்து உத்வேகம் பெறும் அதிகாரியாகத் திகழ்ந்தவர். மும்பையின் தீவிரவாத தடுப்புத் துறை தலைவராக இருந்தபோது அனீஸ் அன்சாரி என்ற மென்பொறியாளரை கைது செய்து பிரபலமானார்.

அமெரிக்க பள்ளி ஒன்றில் குண்டுவைக்க சதி திட்டம் தீட்டிய அன்சாரியை கைது செய்தது அவருக்குப் பெரும் பெயரைப் பெற்றுத்தந்தது. 2013-ல் ஐபிஎல் சூதாட்ட வழக்கை விசாரித்தவர் இவர்தான்.

இந்நிலையில்தான், ஹிமான்சு இன்று பிற்பகல் 1.40 மணியளவில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்கள், "ஹிமான்சு ராய், கடந்த சில காலமாக மருத்துவ விடுப்பில் இருந்தார். அவருக்கு கேன்சர் நோய் தாக்கியிருந்தது. தற்போது நோய் முற்றிய நிலையில் வாடி வந்தார். இன்னும் 7 ஆண்டுகள் சர்வீஸ் பாக்கியிருந்தும் களத்தில் பணியாற்ற முடியாதது அவருக்கு மன வேதனை அளித்தது. இந்நிலையில்தான், ஹிமான்சு தற்கொலை செய்து கொண்டுள்ளார்" என்றன.

கடைசியாக, ஹிமான்சு மகாராஷ்டிர மாநில ஏடிஜிபியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகளைத் துரத்திய போலீஸை கேன்சர் நோய் துரத்து தற்கொலைவரை கூட்டிச் சென்ற சோகம் அவரது குடும்பத்தாரை வெகுவாகப் பாதித்துள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close