[X] Close

மத்திய அமைச்சர் வீரேந்திர சிங் ராஜினாமா: மகனுக்கு சீட் கிடைத்த நிலையில் குடும்ப அரசியலைத் தவிர்ப்பதாக அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 17:23 pm
  • அ+ அ-

-பிடிஐ

ஹரியாணாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வீரேந்திர சிங் தனது எம்.பி. உள்ளிட்ட பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹரியாணாவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தெரிவிக்கையில், ''வரும் மக்களவைத் தேர்தலில் ஹரியாணா மாநிலத்தில் ஹிசார் தொகுதியில் பாஜக சார்பாகப் போட்டியிட என் மகனுக்கு சீட் கிடைத்துள்ளதால் மத்திய அமைச்சர் பதவி, எம்.பி.பதவிகளை ராஜினாமா செய்கிறேன்.

எனது ராஜினாமா முடிவை பாஜக தலைவர் அமித் ஷாவுக்குத் தெரிவித்துவிட்டேன். அத்துடன் எனது மகனுக்கு மக்களவை வேட்பாளருக்கான சீட் கிடைத்துள்ள நிலையில் குடும்ப அரசியலுக்கு எதிரான நிலைப்பாட்டின் அடிப்படையில் இம்முடிவை எடுத்துள்ளதையும் அவருக்குத் தெரிவித்துள்ளேன்'' என்றார் வீரேந்திர சிங்.

வீரேந்திர சிங், 2014-ல் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர் அவர் துறை மாற்றப்பட்டது. 2016-ல் இரும்பு எஃகு துறை அமைச்சராகப் பணியாற்றத் தொடங்கினார்.

சிங், 2014-ல்தான் பாஜகவில் இணைந்தார். அவர் 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close