[X] Close

எல்லை காக்கும் நீங்கள் எனக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்.. லக்னோ மருத்துவரின் நேசக் கரம்


lucknow-doctor-treats-soldiers-for-free

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 May, 2018 14:11 pm
  • அ+ அ-

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் மருத்துவர் அஜய் சவுத்ரி. கோமதி நகரில் இவர் மருத்துவமனை வைத்திருக்கிறார். அவரது மருத்துவமனைக்கு நீங்கள் சென்றால் ஒரு வித்தியாசமான வாசகம் அடங்கிய பலகையைப் பார்க்கலாம்.

மருத்துவமனை என்பதால் ஆரோக்கியக் குறிப்பு என நீங்கள் நினைத்துவிட வேண்டாம். அந்தப் பலகையில், "ராணுவ வீரர்களுக்கு மருத்துவக் கட்டணம் இல்லை. நீங்கள் எல்லையில் ஏற்கெனவே கட்டணம் செலுத்திவிட்டீர்கள்" என எழுதியிருக்கும்.

ஆம், இவர் தனது மருத்துவமனைக்கு வரும் படை வீரர்களிடம் கட்டணம் வாங்குவதில்லை. ஆனால், அவர்களின் ஐடி கார்டை பரிசோதித்த பின்னரே இதை அவர் செய்கிறார்.

அஜய்யின் தந்தை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது சகோதரரும் இந்திய கடற்படையில் பணியாற்றியிருக்கிறார். அஜய்க்கும் ராணுவத்தில் சேர வேண்டும் என்பதே ஆசை. அதற்காக தேசிய பாதுகாப்பு அகாடமி நடத்திய தேர்வில்கூட கலந்து கொண்டார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரால் பரீட்சையில் வெற்றி அடைய முடியவில்லை.
இந்நிலையில், "எல்லையில் நாட்டுமக்களுக்காக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு, நாம் நிம்மதியாக நமது வீடுகளில் தூங்குவதற்காக தூக்கம் விழித்திருப்பவர்களுக்கு இதுதான் நான் செலுத்தக்கூடிய நன்றிக்கடன். இதை நான் விருப்பத்துடனையே செய்கிறேன்" என அஜய்சிங் கூறுகிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close