[X] Close
 

தேர்தலில் வாக்களிக்கும் இளசுகளுக்கு இலவச தோசை, காபி, இன்டர்நெட்: கர்நாடகா கடைக்காரரின் புது யோசனை


karnataka-elections-show-your-inked-finger-get-free-dosas-coffee-internet

  • பாரதி
  • Posted: 11 May, 2018 12:32 pm
  • அ+ அ-

தேர்தலில் இளைஞர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் கர்நாடகாவில் கடைக்காரர் ஒருவர் நூதன விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறார். உங்கள் விரலில் தேர்தலில் வாக்களித்த மையுடன் என் கடைக்கு வாருங்கள் உங்களுக்கு இலவசமாக தோசை, காபி, இன்டர்நெட் வசதி செய்து தருகிறேன்.

எனது கடையில் வழக்கமாக நகலெடுக்கு ஒரு பிரதிக்கு ரூ.1 வாங்குவேன். ஆனால், உங்கள் விரலில் தேர்தல் மையுடன் வந்தால் உங்களுக்கு வெறும் 25 காசுகளில் நகலெடுத்துத் தருகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து விஸ்வேஸ்வரா ஐயர் என்ற அந்த நபர் கூறும்போது, "இளைஞர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. 80% இளைஞர்களுக்கு எந்தக் கட்சியின் மீதும் வேட்பாளர் மீதும் நம்பிக்கை இல்லை. இதன் காரணமாகவே அவர்கள் வாக்களிப்பதில்லை. நானும் எந்தக் கட்சிக்கும் ஆதரவானவன் அல்ல. ஆனால், நாம் காண விரும்பும் மாற்றத்தை நாம்தான் தொடங்க வேண்டும் என்பதை நம்புகிறேன்" என்றார்.

இவரைப் போலவே, ரூபதுங்கா சாலையில் உள்ள நிசார்கா கிராண்ட் ப்யூர் கடையும் முதல் முறை வாக்களிப்பவர்களுக்கு இலவச மசால் தோசை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. மற்ற வாக்காளர்களுக்கு இலவச காபி வழங்குவதாகவும் அந்த உணவகம் அறிவித்திருக்கிறது.

நிசார்கா கிராண்ட் ப்யூர் கடையின் நிறுவனர் கிருஷ்ணராஜ் கூறும்போது, "வாக்களிப்பதால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என இளைஞர்கள் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். இளைஞர்கள்தான் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் சக்திபடைத்தவர்கள் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் விதைக்க வேண்டும் என விரும்பினேன். அதனாலேயே இந்த சலுகையை அறிவித்திருக்கிறேன்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close