[X] Close

காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது: பாஜக எம்.பி இல.கணேசன் கருத்து


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 10:32 am
  • அ+ அ-

சிவகங்கையில் பாஜக வேட் பாளர் ஹெச்.ராஜாவுக்கு ஆதர வாக அக்கட்சியின் மூத்த தலை வர் இல.கணேசன் எம்.பி. பிரச் சாரம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திரா காந்தி காலத்திலேயே வறுமையை ஒழிப்போம் என்று காங்கிரஸ் சொன்னது. ஆனால் ஒழிக்கவில்லை. தற்போது ராகுல் வறுமையை எதிர்த்து துல்லியத் தாக்குதல் நடத்து வோம் என்று கூறியுள்ளார். வறுமையை ஒழிப்பேன் என்று மோடி சொல்லவில்லை. ஆனால், சிறப்பான திட்டங்களைத் தீட்டி சாதாரண மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளார். ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றைக் கொள்கை, ஒற்றைப் பண்பாடு, ஒற்றை வரலாறு என்பதை ஏற்றுக் கொண்டவர்கள் பாஜகவினர் என ராகுல் விமர்சித்துள்ளார். இதில் எந்த வேறுபாடும் இல்லை. அது தான் தேசியம்.

காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது. அதிகபட்சம் 31 முதல் 40 இடங்கள் தான் காங்கிரஸுக்கு கிடைக்கும் என்று ஒரு கணிப்பு சொல்கிறது. ஒரு தேசிய கட்சி மாநிலத்துக்கு மாநிலம் கொள்கையை மாற்றுவது என்பது தவறானது. தமிழகத்தை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று ராகுல் பேசியுள்ளார். அதையே தான் நானும் சொல்கிறேன். கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஒரு மலையாளியைத்தான் தேர்ந் தெடுக்க வேண்டும். ஸ்டாலினுக்கு முதல்வராக வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் ராசி இல்லை. ஜிஎஸ்டியை மத்திய அரசு தான் முழுமையாக செயல் படுத்தியது என்று சொல்ல முடி யாது. மாநில அரசும் சேர்ந்து தான் செயல்படுத்தியது. அதிமுகவுடனான தேர்தல் கூட்டணி கொள்கை கூட்டணி என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close