[X] Close

காங்கிரஸுடன் டெல்லியில் மட்டும் கூட்டணி சாத்தியமில்லை: ஆம் ஆத்மி


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 08:22 am
  • அ+ அ-

-பி.டி.ஐ,

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என விரும்புகிறோம். இதற்காக காங்கிரஸுடன் எங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைக்கத் தயாராக உள்ளோம். கடந்த 1 வாரத்தில் காங்கிரஸுடன் நடந்த பேச்சுவார்த்தையில் டெல்லி, கோவா, சண்டிகர், ஹரியாணா மற்றும் பஞ்சாபில் உள்ள 33 இடங்களுக்கு கூட்டணிக்கு பரிந்துரை செய்தோம். இந்த 33-ல் 23 தொகுதிகள் பாஜக கூட்டணி வசம் உள்ளன. காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணியால் இந்த 23 தொகுதிகளிலும் பாஜக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

ஆனால் காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே காலம் தாழ்த்திவிட்டு தற்போது டெல்லியில் மட்டுமே கூட்டணி வைத்துக்கொள்ள முடியும் என்கிறது, டெல்லியில் மட்டும் கூட்டணி வைப்பது பிரச்சினைக்கு தீர்வாகாது. டெல்லி, ஹரியாணா மற்றும் சண்டிகரில் காங்கிரஸுடன் கூட்டணிக்கு இன்னும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இவற்றில் உள்ள 18 தொகுதிகளிலும் பாஜகவை தோற்கடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் டெல்லியில் மட்டும் கூட்டணி என்றால் அது சாத்தியமில்லை.

இவ்வாறு மணிஷ் சிசோடியா கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close