[X] Close

மோடி போன்ற தோற்றம் கொண்ட வேட்பாளருக்கு நோட்டீஸ்


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 08:23 am
  • அ+ அ-

உத்தரபிரதேசம் சஹரான்பூரை சேர்ந்தவர் அபிநந்தன் பதக். இவர் பிரதமர் நரேந்திர மோடி போன்ற உருவத் தோற்றம் கொண்டவர். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த இவர் கடந்த 2018-ம் ஆண்டில் காங்கிரஸில் இணைந்தார். தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் லக்னோ தொகுதியில் சுயேச்சையாக அவர் போட்டியிடுகிறார். பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்வேன் என்று அறிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை லக்னோ தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் நிருபர்களிடம் பேசிய அவர், "ஒரு ஓட்டுக்கு ஒரு நோட்டு (பணம்) என்பதே எனது பிரச்சார கொள்கை" என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் அபிநந்தன் பதக்கிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close