[X] Close

மோடி பிரதமராக படத்தை வைத்து உ.பி.யில் வழிபாடு


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 08:14 am
  • அ+ அ-

உ.பி. மாநிலம் பாலியா மாவட்டத்தில் பன்ஸ்தீ என்ற இடத்தில் உள்ள துர்கை அம்மன் கோயில் உள்ளது. துர்கை அம்மன் சிலை முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் படத்தை பாஜகவினரும் மோடியின் ஆதரவாளர்களும் வைத்துள்ளனர்.

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று சிறப்பு வழிபாடுகளும் அந்தப் படத்துக்கு முன் பிரார்த்தனைகளும் நடக்கின்றன. மேலும், சிலர் விரதமும் இருந்து வருகின்றனர். உள்ளூர்வாசியான ரமாவதி தேவி என்பவர், ‘‘மோடி மீண்டும் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்து பிரதமராக வேண்டும் என்பதற்காக கிராமவாசிகள் பிரார்த்திக்கிறோம்’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close