[X] Close
 

இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று ஏதுமில்லை.. ட்விட்டரில் உதவி கோரிய மாணவருக்கு சுஷ்மா நறுக் பதில்


indian-occupied-kashmir-doesn-t-exist-sushma-swaraj-to-student-seeking-help

  • பாரதி
  • Posted: 11 May, 2018 10:58 am
  • அ+ அ-

பிலிப்பைன்ஸில் உள்ள இந்தியர் ஒருவர் தனக்கு புதிய பாஸ்போர்ட் விரைவில் கிடைக்க உதவுமாறு ட்வீட் செய்திருக்க அதற்கு காட்டமான பதிலளித்தார் சுஷ்மா ஸ்வராஜ். 

வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற நாள் முதலே சமூகவலைதளங்களில் குறிப்பாக ட்விட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறார் சுஷ்மா. தன்னிடம் ட்விட்டர் வாயிலாக உதவி கோரும் இந்தியர்கள் பலருக்கும் அவர் உதவி செய்திருக்கிறார். செய்துவருகிறார்.

இந்நிலையில், நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து பிலிப்பைன்ஸ் வாழும் ஷேக் அடீக் என்ற இந்திய மாணவர் ட்வீட் செய்திருந்தார். அதில் அவர், "நான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர். எனது பாஸ்போர்ட் சேதமடைந்துவிட்டது. அதனால், புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால், ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் எனக்கு இன்னமும் பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. எனக்கு உதவி செய்யுமாறு வேண்டுகிறேன். மருத்துவப் பரிசோதனைக்காக நான் விரைவில் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது" என ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், சுஷ்மா ஸ்வராஜ், "நீங்கள் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் நான் உங்களுக்கு நிச்சயம் உதவியிருப்பேன். ஆனால், உங்கள் ட்விட்டர் புரொபைலில் நீங்கள் இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற ஓர் இடமே இல்லை" எனக் காட்டமாக பதிலளித்தார்.
சிறிது நேரம் கழித்து சுஷ்மா அடீக்கை டேக் செய்து இன்னொரு ட்வீட் பதிவு செய்தார். "நீங்கள் உங்கள் புரொஃபைலை மாற்றியதில் மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டிருந்தார். அதுதவிர, "அடீக், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியர்" அவருக்கு உதவுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்,

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close