[X] Close
 

ரூ.40 கோடி பணத்தை திறந்த வாகனத்தில் ஏற்றிச் சென்ற எஸ்பிஐ


rs-40-crore-transported-in-open-trolley-in-nalgonda

  • பாரதி
  • Posted: 11 May, 2018 10:38 am
  • அ+ அ-

தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவில் பாதுகாப்பு விதிமுறைகள், வங்கி நடைமுறைகளை மீறி பாரத ஸ்டேட் வங்கியும் அதன் சார்பு வங்கியான ஆந்திரப் பிரதேச கிராமீன் விகாஸ் வங்கியும் இணைந்து திறந்த வாகனத்தில் ரூ.40 கோடி பணத்தை ஏற்றிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

அருகில் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்கும் வங்கிக்கிளைதான் என்றாலும்கூட திறந்த வாகனத்தில் வெறும் மூன்று காவலர்கள் பாதுகாப்பில் ரூ.40 கோடி பணத்தை எடுத்துச் சென்றது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது குறித்து வங்கிக் கிளை மேலாளர் மது கூறும்போது, "ரிது பந்து திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதை முன்னிட்டு எஸ்.பி.ஐ., வங்கியின் கருவூலத்தில் இருந்து மற்ற ஐந்து வங்கிகளுக்கும் பணம் கொண்டு செல்லப்பட்டது. பணத்தை ஏற்றிச் செல்வதற்கான கேஷ் வேன் எங்களிடம் இல்லை. கேஷ் வேன் இல்லை என்பதால் பணப்பட்டுவாடா தடைபடக்கூடாது என நாங்கள் நினைத்தோம். அதன் காரணமாகவே இவ்வாறு அனுப்பி வைத்தோம்" என்றார்.

ஆனால், எஸ்பிஐ மேலாலர் பி.பி.ஷிவகுமார் கூறும்போது, "பணத்தை அனுப்பிவைத்தபோது உடன் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம். இவ்வளவு பெரிய தொகையை அனுப்பிவைக்கும்போது பாதுகாப்பு வாகனம் தேவையில்லை, ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு இருந்தாலே போதுமானது" என்றார்.
அதேவேளையில், அப்பகுதியின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பாஷா கூறும்போது, "இவ்வளவு பெரிய தொகையை எடுத்துச் செல்லும்போது மூன்று காவலர்களின் பாதுகாப்பு மட்டுமே போதுமானது அல்ல. இது தொடர்பாக வங்கி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது" என்றார்.

ரிது பந்து திட்டம் என்றால் என்ன?
ரிது பந்து அல்லது ஃபிஸ் (FISS- Farmers’ Investment Support Scheme )  திட்டம், விவசாயிகள் நலன் காக்க தெலங்கானா அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம். ராபி மற்றும் காரிப் பயிர்ப்பருவங்களில் ஒரு ஏக்கருக்கு ரூ.4000 அரசாங்கம் செலவு செய்யும். இது அரசு சார்பில் செய்யப்படும் முதலீடு செய்யப்படும் தொகையாகும். இந்தத் திட்டம் நேற்று (மே 10) அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close