[X] Close

காங்கிரசுக்கு ரகசிய உறவு: யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 09:05 am
  • அ+ அ-

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:சத்தீஸ்கரில் நக்சலைட் தீவிரவாதம் குறித்து காங்கிரஸ் கவலைப்படவில்லை. அதனால்தான் தண்டேவடாவில் சில நாட்கள் முன்பு பாஜக எம்எல்ஏ பீமா மாண்டவி நக்சலைட்களின் வெடிகுண்டு தாக்குதலுக்கு பலியானார். மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை தீவிரவாதத்தையும் நக்சலைட்களையும் ஊக்குவிக்கிறது. தேச விரோத சக்திகளுடன் காங்கிரசுக்கு ரகசிய உறவு உள்ளது.

கடவுள் ராமர் நமது உயிரோடும் உணர்வோடும் கலந்துவிட்டவர். நமது கலாச்சாரத்தின் அடையாளம். ஆனால், ராமர் இருந்தாரா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. ராமர் பாலம் குறித்தும் கேள்வி எழுப்பியதுடன், அந்தப் பாலத்தையே அழிக்க முயற்சித்தார்கள். ராமர் இருந்தாரா என்று கேள்வி கேட்டவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. இதை நேரடியாக பார்க்க வேண்டும் என்றால் உ.பி.க்கு வந்து பாருங்கள். மாநிலத்தில் அமைதியையும் வளர்ச்சியையும் கொண்டு வந்துள்ளோம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதத்தை முற்றிலும் அழிப்போம். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close