[X] Close

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு: பகுஜன் தலைவர் மாயாவதி குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 09:02 am
  • அ+ அ-

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உத்தரபிரதேசத்தில் வியாழக்கிழமை மக்களவைக்கான முதல் கட்ட தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அரசு அதிகாரமும் போலீசும் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலும் முறைகேடு நடந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்துக்கு மக்கள் வாக்களித்தால் அது பாஜகவின் சின்னமான தாமரைக்கு பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு சென்றுள்ளோம். தேர்தல் ஆணையம் இதில் தலையிட்டு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். உ.பி.யில் மீதியுள்ள கட்டங்களில் நடக்கும் தேர்தல்களில் மக்களிடம் இருந்து இதுபோன்ற புகார்கள் வராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதில் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் தேர்தல் நடத்துவதில் எந்தப் பலனும் இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தாங்கள் செலுத்தும் வாக்கு சரியாக பதிவாகிறதா என்பதை பகுஜன் சமாஜ் தொண்டர்கள் விழிப்புடன் இருந்து உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close