[X] Close

மோடிக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டு: ராகுல் மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 09:01 am
  • அ+ அ-

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மீதான தீர்ப்பு குறித்த மறு சீராய்வுமனு மீது கடந்த 10-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களையும், நாளேடுகளில் வெளியான ஆதாரங்களையும் ஏற்கலாம் என்று தெரிவித்தது.

விரைவில் ரஃபேல் விவகாரத்தில் விசாரணை தொடங்கும் என்றும் அறிவித்தது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஊழல் நடந்திருப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது என்றும் காவலாளியை (பிரதமர் மோடி) திருடன் என்று நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ராகுல் காந்தி மீது புகார் மனு அளித்தனர். அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ராகுல் காந்தி அவதூறாக பேசி வருகிறார். எனவே, தேர்தல் ஆணையம் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பின்னர் பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், ‘‘பிரதமர் மோடிக்கு எதிராக உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுக்களை ராகுல் கூறி வருகிறார். பிரதமரை திருடன்என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

அதுவும் உச்ச நீதிமன்றமே பிரதமரை திருடன் என்று கூறியதாக பொய்யான தகவல்களை சொல்கிறார். இதுதொடர்பாக ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமருக்கு எதிராக ராகுல் அவதூறாக பேசுவதை பலமுறை நாங்கள் புகார் கூறியும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close