[X] Close

130 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆந்திராவில் மீண்டும் ஆட்சி அமைப்போம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை


130

  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 08:55 am
  • அ+ அ-

ஆந்திர மாநிலம், அமராவதியில் நேற்று தெலுங்கு தேசம் கட்சித்தலைவரும் முதல்வரு மான சந்திரபாபு நாயுடு செய்தி யாளர்களிடம் பேசியதாவது:

என்னை கேட்காமலேயே போலீஸ் அதிகாரிகளை மாற்று வதா? தேர்தலுக்கு தயாராவதற்கு கூட எனக்கு நேரம் வழங்காமல் நடந்த சூழ்ச்சி எனக்கு தெரியும். சில இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டியுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றால் மாநிலம் என்னவாகும் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு மக்கள் வாக்களித்துள் ளனர். ஜெகன் பேசிய இடங் களில் எல்லாம் மக்களை உசுப் பேற்றும் வகையிலேயே பேசி னார். மற்றொரு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் ‘சாவதா அல்லது சாகடிப்பதா’ என பேசினார். நான் பயந்திருந்தால் இந்த தேர்தலே நடந்திருக்காது. மோடிக்கு பயந்திருந்தால் நாம் இந்த மாநிலத்தில் இருந்திருக்க முடியுமா ? இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்துள்ளது. 31 சதவீத இடங்களில் வாக்குப்பதிவு மதியம் 1 மணி வரை நடைபெறவே இல்லை. பல இடங்களில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸார் கொலை வெறியுடன் செயல்பட்டனர். நான் போட்ட ஓட்டு எனது கட்சிக்குத்தான் விழுந்ததா ? எனும் சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது. நாளை (இன்று) டெல்லிக்கு சென்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து புகார் செய்ய உள்ளேன். தேவைப்பட்டால் டெல்லியில் தேர்தல் ஆணையம் முன் தர்ணாவில் ஈடுபடவும் தயங்க மாட்டேன்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

அப்போது நிருபர் ஒருவர் நீங்கள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள் என கேட்டதற்கு, ‘‘130 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். மே மாதம் 23ம் தேதிக்கு பின்னர், ஒரு நல்ல நாளில் பதவிப் பிரமாணம் நடை பெறும். அப்போது மீண்டும் உங் களை அழைக்கிறேன்” என சிரித்த படி கூறினார் சந்திரபாபு நாயுடு.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close