[X] Close

ஆர்ஜேடி - ஜேடியு இணைப்புக்கு தூது விட்டாரா நிதீஷ் குமார்?- ராப்ரி தேவி பேட்டியால் பரபரப்பு


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 08:57 am
  • அ+ அ-

பிஹார் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி பாட்னாவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, ஐக்கிய ஜனதா தளக் கட்சி நிர்வாகியும், தேர்தல் வியூகநிபுணருமான பிரசாந்த் கிஷோர், லாலுவை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தையும்(ஆர்ஜேடி), ஐக்கிய ஜனதா தளத்தையும் (ஜேடியு) மீண்டும் இணைப்பதற்கு முதல்வர் நிதீஷ் குமார் விரும்புவதாக தெரிவித்தார். மேலும், அவ்வாறுகூட்டணி அமைத்து ஒரு பொதுவான பிரதமர் வேட்பாளரையும் நிறுத்தலாம் என்றும் கூறினார்.

இதனை லாலு ஏற்க மறுத்துவிட்டார். நிதீஷ் குமார் எங்களுக்கு செய்த துரோகத்தால் அவரை எங்களால் மீண்டும் நம்ப முடியாது என லாலு தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக என்னையும் பல முறை கிஷோர் குமார் சந்தித்து பேசினார். ஆனால், நிதீஷ் குமாரின் யோசனைக்கு நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இவ்வாறு ராப்ரி தேவி தெரிவித்தார்.

பிஹாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் ஆட்சி நடத்தி வருகிறது. மேலும், இந்த மக்களவைத் தேர்தலிலும் அவ்விரு கட்சிகளுமே கூட்டணி அமைத்திருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், ராப்ரி தேவி இவ்வாறு தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close