[X] Close

தேவகவுடா, சித்தராமையா இணைந்து பிரச்சாரம்


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 08:45 am
  • அ+ அ-

-இரா.வினோத்

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அமைத்துள்ளன. மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 21 தொகுதிகளில் காங்கிரஸும், 7 தொகுதிகளில் மஜதவும் போட்டியிடுகின்றன.

ஆனால், இரு கட்சிகளின் தொண்டர்கள் இடையே ஒற்றுமை ஏற்படவில்லை. தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றிலும் இரு கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டது.

இதனால், கூட்டணி கட்சி வேட்பாளருக்கு வேலை செய்யாத 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை இரு கட்சி தலைமைகளும் இடைநீக்கம் செய்துள்ளன. இதனிடையே, முதல்வர் குமாரசாமி மண்டியாவில் தனது மகன் நிகில் குமாரை தோற்கடிக்க காங்கிரஸ் சதி செய்வதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், காங்கிரஸ் - மஜத தொண்டர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த, அரசிய லில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் (மஜத), முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் (காங்கிரஸ்) இணைந்து பிரச்சாரம் செய்ய முடிவெடுத்தனர்.

அதன்படி, இருவரும் நேற்று முன்தினம் தேவகவுடா போட்டியிடும் துமக்கூருவில் பிரச்சாரம் செய்தனர். அதிருப்தி யில் இருந்த தற்போதைய எம்.பி .முத்தஹனுமே கவுடாவும் கூட்டத்தில் உரையாற்றினார்.

நேற்று மண்டியாவில் மஜத சார்பில் களமிறங்கியுள்ள நிகிலை ஆதரித்து இருவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு கட்சி தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close