[X] Close

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாஜக அமைச்சர் ராஜினாமா


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 08:42 am
  • அ+ அ-

-பி.டி.ஐ,

இமாச்சலப் பிரதேச மாநில மின்சாரத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அனில் சர்மா நேற்று தமது பதவியை ராஜினாமா செய்தார்.

இமாச்சலப் பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மின்சாரத் துறை அமைச்சராக இருந்தவர் அனில் சர்மா. இவரது மகனான ஆஷ்ரே சர்மா, காங்கிரஸ் கட்சி நிர்வாகியாக இருக்கிறார்.

இந்நிலையில், அம்மாநில மக்களவைத் தேர்தலில் ஆஷ்ரே சர்மாவை மன்டி மக்களவைத் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அண்மையில் அறிவித்தது. இந்தத் தொகுதியானது அனில் சர்மா சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

இது, அனில் சர்மாவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர் தமது அமைச்சர் பதவியையும், எம்எல்ஏ பதவியையும் நேற்று ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்த போதிலும், தாம் பாஜகவிலேயே தொடர்வதாகவும் அனில் சர்மா தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close