[X] Close

எல்லாமே கொடுக்கல் வாங்கல்தான்.. வாக்களித்தால் உங்களுக்குச் செய்வோம்... இல்லையேல்..: முஸ்லிம் வாக்காளர்களை நோக்கி மேனகா காந்தி பேச்சு


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 19:36 pm
  • அ+ அ-

-சிறப்புச் செய்தியாளர் (தி இந்து ஆங்கிலம்)

ஒருவேளை என்னுடைய வெற்றி முஸ்லிம்கள் இல்லாமல் நிறைவேறினால் அதனால் என் இதயம் கனக்கும் என்று மேனகா காந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய அமைச்சர் மேனகா காந்தி சுல்தான்பூரில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் முஸ்லிம் வாக்காளர்கள் பற்றி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது, அதில் முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் கோரிக்கைகளை தான் புறக்கணிக்க வேண்டியிருக்கும் என்ற தொனியில் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

“நான் வெற்றி பெறுகிறேன். நான் மக்கள் என் மீது வைத்துள்ள ஆதரவு மற்றும் அபிமானத்தினால் வெற்றி பெறுகிறேன். ஆனால் என் வெற்றி முஸ்லிம்கள் ஆதரவு இல்லாமல் நிறைவேறினால் அது என் இதயத்தைக் கனக்கச் செய்யும். அப்படியிருந்தால், முஸ்லிம் ஒருவர் என்னிடம் காரியம் ஆகவேண்டும் என்று வந்தால், நான் எப்படி அவருக்கு உதவ முடியும்? எனக்கு அது விஷயமா? எல்லாமே கொடுக்கல் வாங்கல்தான்.

நாம் அனைவரும் மகாத்மா காந்தியின் குழந்தைகள் அல்லவே? நாங்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருந்து விட்டு தேர்தலில் தோற்கடிக்கப்படுவது என்ன நியாயம்.  நீங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு வெற்றிதான். நான் ஏற்கெனவே வென்று விட்டேன். ஆனால் உங்களுக்கு நான் தேவைப்படுவேன். அடித்தளம் அமைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு இது”  என்று முஸ்லிம் வாக்காளர்கள் முன்னிலையில் சுல்தான்பூரில் பேசியுள்ளார் மேனகா காந்தி.

முன்னதாக முஸ்லிம்கள் வாக்குகள் விவகாரத்தில் பாஜகவின் புகார் அடிப்படையில் தேர்தல் ஆணையம் பகுஜன் தலைவர் மாயாவதிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் மேனகா காந்தியின் இந்தச் சர்ச்சைப் பேச்சு குறித்து காங்கிரஸ் ஆதரவாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர் தெஹ்சீன் புனாவாலா தன் ட்விட்டர் பக்கத்தில், “அமித் ஷா முதல் மேனகா காந்தி வரை முஸ்லிம்களைத்தான் குறிவைத்து அச்சுறுத்துகின்றனர். சுதந்திர இந்தியாவின் தேர்தல்களில் இதற்கு முன்னுதாரணங்கள் இல்லை. தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. செயல்படுவதில்லை” என்று சாடியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close