[X] Close

‘கருந்துளை’ புகைப்படத்தை வைத்து  மோடி மீது அகிலேஷ் சுவாரஸ்ய விமர்சனம்


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 18:14 pm
  • அ+ அ-

லோக்சபா தேர்தல்கள் தொடங்கி விட்டன, அரசியல் பிரச்சாரகர்கள் தங்களுக்குக் கையில் கிடைக்கும் விஷயங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கும் போக்கு தொடர்ந்து வருகிறது.

 

யானை முதல் ஊசி வரை அனைத்தையும் ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் பயன்படுத்துகின்றனர் ஆனால் பிரபஞ்சவெளியை ஒருவரும் உதாரணமாக கையில் எடுப்பதில்லை. ஏனெனில் அதற்கு அறிவியல் அறிவு அவசியம். இன்றைய அரசியல்வாதிகளுக்கோ புராணங்களை தப்பும் தவறுமாகப் புரிந்து வைத்திருக்கும் அளவுக்குக் கூட தப்பும் தவறுமாகக் கூட அறிவியலைப் புரிந்திருப்பார்களா என்பது ஐயமே.

 

இந்நிலையில் பிரதமர் மோடியைத் தாக்கிப்பேச அனைத்து உத்திகளையும் எதிர்க்கட்சியினர் கையில் எடுத்துள்ளனர். மோடியோ திரும்பத் திரும்ப ‘70 ஆண்டுகால ஊழல் ஆட்சி’ என்பதையே பல்வேறு விதங்களிலும் பாலகோட், புல்வாமா என்றும் கூறியது கூறல் செய்து கொண்டிருக்கிறார்.

 

அகிலேஷ் யாதவ் ஒரு தேர்தல் பரப்புரையில் மோடியை விமர்சிக்க கருந்துளையை (Blackhole), பயன்படுத்தியுள்ளார். சமீபத்தில் கருந்துளை எப்படியிருக்கும் என்ற உண்மையான புகைப்படம் வெளியாகி அறிவியல் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியது.

 

ஆனால் அரசியல்வாதியின் ஆயுதமாகி விடுவோம் என்று பாவம் கருந்துளைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  பிரதமர் நரேந்திர மோடி எப்போதும்  ‘நல்ல நாட்கள் வருகின்றன’ என்ற பொருளில் இந்தியில் ‘அச்சே தின் ஆ ரஹே ஹை’ என்று எழுதுவார் பேசுவார்.

 

அகிலேஷ் யாதவ் தன் ட்விட்டர் பக்கத்தில் கருந்துளை புகைப்படத்தை வெளியிட்டு,  “கருந்துளை கூட நம் கண்களுக்கு தெரியத் தொடங்கி விட்டது. ஆனால் ‘நல்ல நாள்’ (அச்சே தின்) இன்னமும் தெரியவில்லை” என்று பிரதமர் மோடியின் பிரச்சார உத்தி வார்த்தையை கேலி செய்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close