[X] Close

சர்ச்சையாகும் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 15:04 pm
  • அ+ அ-

பட்டப்படிப்பை முடித்துள்ளதாக கூறி பொய் சொல்லி ஏமாற்றி வரும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் களம் இறங்குகிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.

ஸ்மிருதி இரானி நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது சமர்ப்பித்த ஆவணங்களில் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 4.71 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருப்பதாக கூறியுள்ளார்.

ரூ.1.75 கோடிக்கு அசையும் சொத்துக்களும், ரூ.13.14 லட்சம் மதிப்புள்ள வாகனங்களும், ரூ.21 லட்சம் மதிப்புள்ள நகைகளும் ரூ.1.45 கோடி மதிப்புள்ள விவசாய நிலம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல் செய்தபோது, 1994ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அவர் தவறான தகவல்களை தெரிவித்து இருந்ததாக காங்கிரஸ் புகார் கூறியது. ஆனால் தற்போது அவர் பட்டப்படிப்பு முடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தை காங்கிரஸ் மீண்டும் எழுப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது:

ஸ்மிருதி இரானி பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்பதை தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். அதுபற்றி நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. அப்படியானல் இதுவரை அவர் ஏன் பொய் சொல்லிக் கொண்டு இருந்தார்.

பதவியேற்கும்போதும், நீதிமன்றத்திலும், மக்களிடமும் தான் பட்டப்படிப்பு படித்துள்ளதாக அவர் கூறியது ஏன். அவர் தொடர்ச்சியாக பொய் சொல்லி வருகிறார் என்பது தற்போது உறுதியாகியுள்து. தேர்தல் ஆணையத்திடம் தவறான தகவல்களை சொல்லி ஏமாற்றிய அவரது வேட்புமனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் அவர் மீது தேரத்ல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close