[X] Close

நேர்மையான காவலாளியா அல்லது ஊழல் வாரிசு வேண்டுமா? மக்களுக்கு பிரதமர் மோடி கேள்வி


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 14:34 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

நேர்மையான காவலாளியைத் தேர்வு செய்யப்போகிறீர்களா அல்லது ஊழல் நிறைந்த வாரிசு குடும்பத்தைத் தேர்வு செய்யப்போகிறீர்களா என்பதை முடிவு செய்யுங்கள் என்று மகாராஷ்டிர தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி இன்று பேசினார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்டத் தேர்தலில் 91 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வரும் மே 19-ம் தேதிவரை அடுத்தடுத்து 6 கட்டங்களாக தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இதற்கான தீவிரமான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகமது நகர், ஷீரடி தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று அகமது நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''கடந்த 5 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சிறப்பான ஆட்சியால், 'இந்தியா சூப்பர் பவர்' என்பதை உலகம் அங்கீகரித்துள்ளது. உங்களுக்கு நினைவிருக்கிறதா, பாஜக ஆட்சிக்கு வரும் முன், கடந்த 10 ஆண்டுகளாக 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் செயல்படும் அரசு இருந்தது. ஊழல்கள், முடிவு எடுப்பதில் தாமதம் ஆகியவை அந்த ஆட்சியில் இருந்தது. நேர்மையான காவலாளி வேண்டுமா அல்லது ஊழல் நிறைந்த வாரிசு குடும்பம் வேண்டுமா என்பதை மக்கள் இப்போது தேர்வு செய்யட்டும்.

21-ம் நூற்றாண்டில் பிறந்த இளைஞர்கள், முதல் முறையாக வாக்களிக்க இருப்பவர்கள், கடந்த கால அரசுகள் தேசப்பாதுகாப்பில் மெத்தனமாக இருந்தார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்தானே?, இதை ஏற்றுக்கொள்கிறீர்கள்தானே?

ஜம்மு காஷ்மீருக்கு தனியாக பிரதமர் தேவை என்று கோரிக்கை விடுத்த கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. எப்போது மக்களைப் பற்றி காங்கிரஸ் சிந்திக்க மறந்ததோ அப்போது இருந்து நான் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து எனக்கு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை.

தேசத்தின் நலனுக்காக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் வெளியே வந்தது. அப்படி இருக்கும் போது, ஒருதேசத்துக்கு இரு பிரதமர்கள் என முழக்கமிடும் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளீர்கள். ஏன் மவுனமாக இ ருக்கிறீர்கள்?. இதை நீங்கள் ஏற்கிறீர்களா?.

நீங்கள் தேசியக் கட்சியாக பெயரை வைத்துக்கொண்டு, வெளிநாட்டு கண்களால்தான் பார்க்கிறீர்களா?. அப்படியென்றால், தேசிய வாதம் என்ற பெயரைக் கட்சிக்கு வைத்து மக்களை நீங்கள் முட்டாள் ஆக்குகிறீர்களா?''

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close