[X] Close

ஸ்மிருதி ஈரானி பட்டப்படிப்பை முடித்தாரா? - வேட்புமனுவில் தகவல்


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 12:51 pm
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் பாஜக போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி ஈரானி, தான் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் களம் இறங்குகிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ஈரானி.

ஸ்மிருதி இரானி நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது சமர்ப்பித்த ஆவணங்களில் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 4.71 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருப்பதாக கூறியுள்ளார்.

ரூ.1.75 கோடிக்கு அசையும் சொத்துக்களும், ரூ.13.14 லட்சம் மதிப்புள்ள வாகனங்களும், ரூ.21 லட்சம் மதிப்புள்ள நகைகளும் ரூ.1.45 கோடி மதிப்புள்ள விவசாய நிலம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல் செய்தபோது, 1994ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அவர் தவறான தகவல்களை தெரிவித்து இருந்ததாக காங்கிரஸ் புகார் கூறியது. ஆனால் தற்போது அவர் பட்டப்படிப்பு முடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close