[X] Close

மோடி விதிமீறல்: தருண் கோகோய் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 08:46 am
  • அ+ அ-

நாடாளுமன்ற மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் நாடு முழுவதும் 91 தொகுதிகளில் நேற்று நடைபெற்றது. இதில் அசாமில் 5 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜோர்கத் நகர வாக்குச்சாவடி ஒன்றில் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் நேற்று வக்குப் பதிவு செய்ய வரிசையில் காத்திருந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அசாமில் 5 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும்போது, 18-ம்தேதி நடைபெறும் 2-வது கட்ட தேர்தலுக்கு பிரதமர் மோடி வாக்கு கேட்கிறார். இது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும். மேலும் அசாம் போராட்ட தியாகிகளின் பெயரில் அவர் வாக்கு கேட்பதும் தேர்தல் விதிமீறல் ஆகும். அசாமில் பாஜகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close