[X] Close

அமேதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் ஸ்மிருதி வேட்பு மனு தாக்கல்


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 08:36 am
  • அ+ அ-

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிட்டார். அவரைஎதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தார். இந்நிலையில், அதே தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். இந்த முறையும் அவரை எதிர்த்து ஸ்மிருதி இரானியை வேட்பாளராக அறிவித்தது பாஜக.

இந்நிலையில், அமேதியில் நேற்று ஸ்மிருதி இரானி வேட்பு மனு தாக்கல் செய்தார். அமேதியில் நேற்றுமுன்தினம் ராகுல் காந்தி ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல் நேற்று ஸ்மிருதியும் பாஜக தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close