[X] Close

ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் வாக்களிக்க மீண்டும் வாருங்கள்: சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 08:30 am
  • அ+ அ-

ஆந்திராவில் வாக்கு இயந்திர கோளாறால் வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மக்களுக்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வாக்களிக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் பல வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பொறுமை இழந்த மக்கள், தங்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றுவிட்டனர்.

இதுதொடர்பாக, தெலுங்குதேசம் கட்சி தலைவரும், ஆந்திரமாநில இடைக்கால முதல்வருமான சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். பின்னர், அமராவதியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காலை 6 மணியிலிருந்தே மக்கள் வாக்களிக்க மிகுந்த அர்வத்துடன் வாக்கு சாவடிகளில் நின்றனர். ஆனால், பல இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், அவர்களால் வாக்களிக்க முடியவில்லை.

இது யாருடைய தவறு? தேர்தல் ஆணையம்தான் அதற்குரிய ஏற்பாடுகளை முறையாக செய்திருக்க வேண்டும்.

மதியம் 3 மணி நிலவரப்படி 50 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. வாக்கு இயந்திரங்கள் சரிவர இயங்கி இருந்தால் இந்தசதவீதம் மேலும் அதிகரித்திருக்கும்.

இந்நிலையில், வாக்களிக்க முடியாமல் திரும்பி சென்ற அனைவரும் தயவு செய்து வாக்களியுங்கள். ஒரு நல்லாட்சி அமைக்க உறுதுணையாக இருங்கள். அராஜக சக்திகளிடம் மாநிலத்தை ஒப்படைத்து விடாதீர்கள். இது உங்கள் எதிர்காலத்தையும் பாதிக்கும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close