[X] Close

பாஜக ஆட்சியில் அச்சுறுத்தல்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 08:34 am
  • அ+ அ-

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:டார்ஜிலிங்கில் நிலவும் அரசியல் குழப்பத்தைக் கொண்டு ஆதாயம் அடைய பாஜக முயற்சிக்கிறது. தேர்தலின்போது டார்ஜிலிங்கில் வன்முறையை பாஜக தூண்ட முயற்சி செய்யும். ஒரே கலாச்சாரத்தை மக்களிடம் பாஜக திணிக்கிறது. மத மோதலைத் தூண்டி தன்னை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் அரசியல் சாசனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காந்தி, நேதாஜி, விவேகானந்தர் ஆகியோரின் கொள்கைகள் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டன. பிரதமர் மோடி தன்னையே முன்னிறுத்திக் கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார். வரலாற்றை சினிமாவாக எடுக்க தூண்டுகிறார். நமோ என்ற பெயரில் டிவி,உடைகள் என எல்லாவற்றிலும்தானே முன்னிறுத்தப்பட வேண்டும் என்று மோடி விரும்புகிறார். இவ்வாறு மம்தா பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close