[X] Close
 

நான் சீருடையுடன் பிச்சை எடுக்க அனுமதியுங்கள்: மும்பை கமிஷனருக்கு காவலர் கடிதம்


let-me-beg-in-uniform-not-got-salary-for-2-months-pleads-mumbai-cop

  • kamadenu
  • Posted: 10 May, 2018 12:25 pm
  • அ+ அ-

'சீருடையுடன் நான் பிச்சை எடுக்க அனுமதியுங்கள்' என மும்பை போலீஸ் கமிஷனருக்கு காவலர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்தவர் தியானேஷ்வர் அஹிர்ராவ். இவர் கான்ஸ்டபிளாக இருக்கிறார். இவருக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வீட்டில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அவர் விடுப்பில் சென்றிருக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக தியானேஷ்வரின் மனைவிக்கு கால் எலும்பு முறிவு ஏற்படவே அவர் 28-ம் தேதிவரை விடுப்பு எடுத்துள்ளார்.

அவசர விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்குச் சேர்ந்த அவருக்கு இதுவரை ஊதியம் ஏதும் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் பலனில்லாததால் விரக்தியில் அவர் கமிஷனருக்கும் முதல்வருக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "உடல்நலம் சரியில்லாத எனது மனைவி, வயதான எனது பெற்றோர், என் மகள் என நிறைய பேரை நான் கவனித்துப் பராமரிக்க வேண்டியுள்ளது. இதுதவிர மாதாந்திர வங்கிக் கடன்களையும் கட்ட வேண்டியுள்ளது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. என்னுடைய குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நான் சீருடை அணிந்தவாரே பிச்சை எடுக்க எனக்கு அனுமதி அளியுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தான் விடுப்பை நீட்டித்தது குறித்து முறைப்படி தனது சகாக்களிடம் தெரிவித்தும்கூட அவசர விடுப்புக்காக தனது சம்பளத்தில் கைவைத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close