[X] Close

தேர்தலில் மோடிக்கு உதவ புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியதா?: அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 12:20 pm
  • அ+ அ-

பிரதமர் மோடிக்கு தேர்தலில் உதவுவதற்காகவே புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியதா என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், " இந்தியாவில் அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீர் பிரச்சினையை பேசித் தீர்க்க மிகுந்த அச்சப்படலாம். ஆனால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீர் பிரச்சினையை பேசித் தீர்க்க முயலும் " எனத் தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு இம்ரான் கான் ஆதரவு தெரிவித்து இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசியமாநாட்டுக் கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், கர்நாடக முதல்வருமான ஹெச்.டி. குமாரசாமி ஆகியோரும் மோடிக்கு இம்ரான் கான் ஆதரவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், " பாகிஸ்தானும், இம்ரான் கானும் வெளிப்படையாக மோடிக்கு ஆதரவு அளிக்கிறார்கள். பாகிஸ்தானுடனும், இம்ரான் கானுடனும் ரகசியமாக உறவு வைத்துள்ளார் மோடி என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது.

மக்களவைத் தேர்தலில்   பிரதமர் மோடிக்கு உதவுவதற்காகவே பிப்ரவரி 14-ம் தேதி, புல்வாமாவில் நமது துணிச்சல் மிகுந்த 40 சிஆர்பிஎப் வீரர்களை பாகிஸ்தான் கொன்றதா எனும் கேள்வி எழுகிறது. மேலும் நமோ தொலைக்காட்சிக்கு இதுவரை எந்தவிதமான உரிமையாளரும் அதிகாரபூர்வமாக இல்லை என்பதால், அந்த தொலைக்காட்சிக்கு பாகிஸ்தான் நிதியுதவி வழங்குகிறதா? " என தாறுமாறாகக் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close