[X] Close

நடிகர் பவன் கல்யாண் கட்சி வேட்பாளர் கைது


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 11:08 am
  • அ+ அ-

-ஐஏஎன்எஸ்

ஆந்திராவில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் 25 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன, சிலபல இடங்களில் வன்முறை நிகழ்ந்துள்ளது, பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

 

இந்நிலையில் ஆந்திராவில் களம் காணும் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா வேட்பாளர் ஈவிஎம் எந்திரத்தை அடித்து உடைத்தற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

குண்டக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனாவின் வேட்பாளர் மதுசூதன் குப்தா ஈவிஎம் எந்திரம் ஒன்றை தூக்கி தரையில் அடித்து நொறுக்கியதற்காக கைது செய்யப்பட்டார்.

 

குட்டி என்ற இடத்தில் உள்ள வாக்குசாவடிக்கு வாக்களிக்க வந்த மதுசூதன் குப்தா எந்திரத்தில் சட்டப்பேரவை, லோக்சபா தேர்தல் தொகுதிகளின் பெயர்கள் தெளிவாகக் காட்டவில்லை என்று பூத் அதிகாரி மீது கோபத்தைக் காட்டினார்.

 

உடனேயே எந்திரத்தை தூக்கி தரையில் அடித்தார். மெஷின் சிதறியது. இதனையடுத்து போலீஸாரால் இவர் கைது செய்யப்பட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close