[X] Close

அமேதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்; சோனியா, பிரியங்காவுடன் வந்தார்


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 18:01 pm
  • அ+ அ-

-ஐஏஎன்எஸ்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உ.பி.யில் உள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இத்தொகுதிக்கான வாக்குப் பதிவு வரும் மே 6-ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

வேட்புமனு செய்வதற்காக இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் வந்திருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக அமேதி மாவட்டத் தலைமையகமான கவுரிகாஞ்சில் நடைபெற்ற மாபெரும் ரோடு ஷோவில் அவர் கலந்துகொண்டார்.

சோனியா காந்தி இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், ராகுல் காந்தி வேட்புமனு படிவங்களை நிரப்பும்போது அருகில் அமர்ந்திருந்தார்.

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த ஸ்மிருதி ரானியை போட்டியோடு எதிர்கொள்ளும் நிலையில் உள்ளார். ஸ்மிருதி ரானியுடன் ராகுல் காந்தி போட்டியிடுவது இது இரண்டாவது முறையாகும். சென்ற முறை 2014-ல் நடைபெற்ற தேர்தலில் ஸ்மிருதி ரானியை எதிர்த்து ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.

ராகுல் காந்தி இம்முறை மூன்றாவதாக களத்தில் இறங்குகிறார். அதற்கு முன்பு அமேதியின் எம்.பி.யாகத் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமேதியில் ராகுல் காந்தி களமிறங்கியுள்ள அதேநேரம் கேரளாவின் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close