[X] Close
 

கழுதைக்கு ஹால் டிக்கெட்: காஷ்மீரில் கோமாளித்தனம்


now-donkey-gets-hall-ticket-for-j-k-exam

  • பாரதி
  • Posted: 28 Apr, 2018 10:22 am
  • அ+ அ-

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தேர்வு வாரியம் நடத்தும் நாயப் தாசில்தார்களுக்கான தேர்வில் கலந்துகொள்ள கழுதை ஒன்றுக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு பசுமாட்டுக்கு இதே தேர்வு வாரியம் ஹால் டிக்கெட் அனுப்பியிருந்தது. இந்நிலையில், மீண்டும் அதே கூத்து அரங்கேறியுள்ளது.

காஷ்மீரி மாநிலத்தைச் சேர்ந்த விஷமக்காரர் யாரோ ஒருவர் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நாயப் தாசில்தார் தேர்வுக்காக கழுதையின் புகைப்படத்தை ஒட்டி விண்ணப்பப் படிவத்தை அனுப்பியுள்ளார்.

கழுதையின் பெயர் கச்சூர் கவுர் என்றும் அவர் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், விண்ணப்பத்தை முறையாக பரிசீலிக்காமலேயே கழுதை புகைப்படத்தையும்கூட கவனிக்காமல் தேர்வு வாரியம் ஹால் டிக்கெட் அனுப்பியுள்ளது. இந்த ஹால் டிக்கெட் தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ஜம்மு காஷ்மீர் தேர்வு வாரியத்துக்கு தி இந்து (ஆங்கிலம்) சார்பாக கேள்வி எழுப்பப்பட அதற்கு பதில் அளிக்கப்படவில்லை.

கவலையைப் பதிவு செய்த ட்விட்டராட்டி..
இந்நிலையில், ட்விட்டர் பதிவர் ஒருவர், "கழுதையின் பெயரில் கணினியில் இருந்து தேர்வு அனுமதிச் சீட்டு பெறப்பட்டது என்பது கேலிக்கூத்தானது. இந்தச் செயல் எப்படி வளங்கள் வீணடிக்கப்படுகின்றன என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், ஃபேஸ்புக்கில் ஒருவர், "இந்த விண்ணப்பத்தை எளிதாக டெலீட் செய்திருக்கலாம் அல்லது ரத்து செய்யப்பட்டிருக்கலாம். எஸ்எஸ்பி அதிகாரிகள் சற்று கவனத்துடன் செயல்பட்டிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. ஏற்கெனவே கடந்த 2015-ல் இதேபோல் பசுமாட்டுக்கு ஹால் டிக்கெட் அளிக்கப்பட்டதாக வெளியான செய்தி காஷ்மீருக்கு அவப்பெயரைப் பெற்றுத்தந்தது. இந்நிலையில், இப்போது மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது' எனப் பதிவிட்டிருந்தார்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close