[X] Close

நாட்டின் முதல் லோக்பால் தலைவராகிறார் முன்னாள்  உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர போஸ்


ex-top-court-judge-justice-pc-ghose-set-to-be-first-lokpal

  • போத்திராஜ்
  • Posted: 17 Mar, 2019 16:13 pm
  • அ+ அ-

 

புதுடெல்லி, பிடிஐ

நாட்டின் ஊழல் கண்காணிப்பு அமைப்பான லோக்பாலின் முதல் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர போஸ் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வரவில்லை. ஆனால்,  மத்திய அரசு வட்டாரங்கள் இதை உறுதியாகக் கூறுகின்றன.

ஊழலைக் கண்காணிக்க மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பும் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், இதற்கு சட்டம் இயற்றப்பட்டநிலையில் லோக்பால் அமைக்கப்படாமல் மத்திய அரசு தாமதித்து வந்தது.

இந்நிலையில், லோக்பால் அமைக்கும் குழுவில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர், மக்களவை சபாநாயகர் ஆகியோர் இடம் பெற்றனர். ஆனால், இதில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத சூழலில் சிறப்பு அழைப்பாளர் என்ற பெயரில் மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மத்திய அரசு அழைத்தது. ஆனால், சிறப்பு அழைப்பாளர் என்ற பெயரில் லோக்பால் கூட்டத்தில் பங்கேற்பதை அவர் புறக்கணித்தார்.

இதற்கிடையே பிப்ரவரி மாத இறுதிக்குள் லோக்பால் அமைப்பின் தலைவர்கள், உறுப்பினர்களை தேர்வு செய்து அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கெடு விதித்து இருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் கூடிய பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு, லோக்பால் அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திரபோஸை தேர்வு செய்துள்ளதாகவும், உறுப்பினர்களாக பெண் உள்பட 4 உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், 4 முன்னாள் அரசு உயர்அதிகாரிகள் தேர்வு செய்யபபட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிக்கையும் வரவில்லை. பினாகி சந்திரபோஸ் தற்போது தேசிய மனிதஉரிமை அணையத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த பினாகி சந்திரபோஸ், அங்கிருந்து பதவி உயர்வு மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close