[X] Close

மன்னர்களை மக்கள் விரும்பவில்லை- பிரதமர் மோடி கருத்து


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 06:40 am
  • அ+ அ-

ஆளில்லா விமானங்களை இணைந்து தயாரிக்க இந்தியாவும் அமெரிக்காவும் திட்டமிட்டுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ராணுவங்களில் எதிரிகளைக் கண்காணிக்கவும் தாக்குதல் நடத்தவும் அதிநவீன ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவம், ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் ராணுவ வீரர்களின் உயிரிழப்பு தவிர்க்கப்படுகிறது. இதேபோல தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட 22 ஆளில்லா விமானங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்த பின்னணியில் இந்திய, அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வாஷிங்டனில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி எல்லன் லார்டு கூறியதாவது:அமெரிக்கா, இந்தியா இடையிலான பாதுகாப்பு உறவு வலுவடைந்து வருகிறது. இரு நாடுகளும் இணைந்து சிறிய ரக ஆளில்லா விமானங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.

எல்லை தாண்டிய நடவடிக்கைகள், பேரிடர் மீட்பு நடவடிக்கைகள், சுரங்க கண்காணிப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் புதிய ஆளில்லா விமானங்கள் தயாரிக்கப்படும். இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே வரும் செப்டம்பரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close