[X] Close

தாவூத் இப்ராஹிமை ஒப்படைக்க வேண்டும்: பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்


dawood-ibrahim-should-be-handed-over

தாவூத் இப்ராஹிம்

  • kamadenu
  • Posted: 17 Mar, 2019 13:36 pm
  • அ+ அ-

தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 1993 மார்ச் 12-ம் தேதி மும்பையின் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தன. இதில் 257 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமான மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானுக்கு தப்பியோடிவிட்டார்.

அவரை ஒப்படைக்கும்படி பாகிஸ்தானிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தாவூத் பாகிஸ்தானில் இல்லை என்று அந்த நாடு மழுப்பலான பதிலைக் கூறி வருகிறது.

உரி ராணுவ முகாம் தாக்குதல், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் செயல்பட்ட ராணுவ முகாம்களை இந்திய வீரர்கள் அழித்தனர். சர்வதேச நாடுகளும் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளன. தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் பாகிஸ்தானுக்கான நிதியுதவிகளை நிறுத்துவோம் என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் பன்னாட்டு நிதி அமைப்புகளும் எச்சரித்துள்ளன.

இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியிருப்பதாவது:தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானும் பங்கெடுத்து வருவதாக அந்த நாடு கூறி வருகிறது. இது உண்மை என்றால் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.

பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகள், தீவிரவாத குழுக்கள் தொடர்பாக பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளித்துவிட்டோம். ஆனால் அந்த நாடு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தாவூத் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் உதவியை இந்தியா கோரியுள்ளது. அமெரிக்கா, சவுதி அரேபியாவின் உதவியுடன் பாகிஸ்தானுக்கு அழுத்தம் அளித்து தாவூதை இந்தியாவுக்கு கொண்டு முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close