[X] Close

2ஜி, காமன்வெல்த், ஹெலிகாப்டர் என ஐ.மு. கூட்டணி ஆட்சியில் ஊழல்மயம்: பிரதமர் நரேந்திர மோடி சரமாரி குற்றச்சாட்டு


2

  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 06:31 am
  • அ+ அ-

பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் தங்கள் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பழைய பிரச்சினைகளை கிளப்புகின்றனர் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மாயாவதி நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் தங்கள் அரசின் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும் ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை ஆகியவை தேர்தலில் முக்கியப் பிரச்சினையாக மாறாமல் இருக்கவும் செத்துப்போன அனைத்து வகை பிரச்சினைகளையும் கிளப்ப முயற்சிக்கின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதிலேயே பிரதமர் மோடி பெரும்பாலும் நேரத்தை செலவிட்டார். இதற்கான விளம்பரங்களுக்கு ரூ. 3,044 கோடி செலவிட்டுள்ளார். உத்தரபிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் ஒவ்வொரு கிராமத்தின் கல்வி மற்றும் மருத்துவ வசதிக்காகஇந்தப் பணத்தை செலவிட்டிருக்கலாம். ஆனால் பாஜகவை பொறுத்தவரை விளம்பரமே மிகவும் முக்கியம். கல்வியும் பொதுநலனும் முக்கியமல்ல.

இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.- பிடிஐ

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close