[X] Close

பெட்ரோல் கணக்கில் சிக்கிய அதிமுக வேட்பாளர்


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 06:21 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், உத்தரபிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்த 2 பாஜக எம்பி-க்கள் அக்கட்சியிலிருந்து விலகி உள்ளனர். மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது.

உ.பி.யின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஷ்யாமா சரண் குப்தா, 2004-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாண்டா தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்டு வென்றார். ஆனால், 2009-ல் பூல்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக சமாஜ்வாதியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

2014-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பிரயாக்ராஜ் (அலகாபாத்) தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட குப்தா வெற்றி பெற்றார். இந்நிலையில், அவர் நேற்று திடீரென அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் சமாஜ்வாதியில் சேர்ந்தார். பாண்டா தொகுதியில் அக்கட்சி சார்பில் குப்தா மீண்டும் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இதுபோல அசாம் மாநிலம் திஸ்பூர் தொகுதி எம்.பி. ராம் பிரசாத் சர்மாவும் பாஜகவிலிருந்து நேற்று விலகினார். ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியில் 15 ஆண்டுகளும் பாஜகவில் 29 ஆண்டுகளும் இருந்துள்ளார்.

இதுகுறித்து சர்மா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறும்போது, “பாஜகவிலிருந்து விலகிவிட்டேன். அசாமில் பாஜகவில் புதிதாக சேர்ந்தவர்களால் பழைய தொண்டர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இது மன வலியைத் தருகிறது. எனினும் அசாம் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்” என பதிவிட்டுள்ளார். கடந்த தேர்தலில் திஸ்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற சர்மாவுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாறாக காங்கிரஸிலிருந்து வந்த ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதே ராம் பிரசாத் சர்மா விலகலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close