[X] Close

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கான முயற்சிகள் தொடரும்: மத்திய வெளியுறவுத் துறை உயரதிகாரி தகவல்


the-efforts-to-declare-an-international-terrorist-will-continue

மசூத் அசார்

  • kamadenu
  • Posted: 17 Mar, 2019 13:27 pm
  • அ+ அ-

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மும்பை, புல்வாமா தாக்குதல்களுக்கு காரணமான மசூத் அசாரை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலமாக சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா முயற்சித்து வருகிறது. ஆனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக உள்ள சீனா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்தியாவின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இதனிடையே, புல்வாமா தாக்குதலுக்கு பின்னர், மசூத் அசாருக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா முடுக்கிவிட்டது. அதன்படி, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அண்மையில் தீர்மானம் கொண்டு வந்தன.

இந்த தீர்மானத்துக்கு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்த சூழலில், சீனா கடைசி நேரத்தில் முட்டுக்கட்டை போட்டது. அதாவது, இந்த தீர்மானம் குறித்து முடிவெடுப்பதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என சீனா தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதனால், இந்த தீர்மானம் 6 மாதங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுடன் இணைந்து இந்தியா தொடர்ந்து முயற்சிக்கும் என மத்திய வெளியுறவுத் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் பொறுமை காக்கவும் இந்தியா முடிவெடுத்திருப்பதாக அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close