[X] Close

மதச்சார்பின்மைக்கு ஆபத்து: புதுச்சேரியில் வைகோ எச்சரிக்கை


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 06:10 am
  • அ+ அ-

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கிழக்கு உத்தரபிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டிருப்பது அந்தக் கட்சியின் உட்கட்சி விவகாரம். அவர் ஏற்கெனவே காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த முறை அதிகாரப் பூர்வமாக கட்சிப் பொறுப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதனால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணியில் ஏற்கெனவே பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கூட்டணி குறித்து ஊதி பெரிதாக்கி வருகிறார்கள். அது புஸ்வாணமாகிவிடும்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்காகவே மக்கள் வாக்களித்தனர். தற்போது அவரது பெயருக்காகவும் செயலுக்காகவும் சேர்த்து பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close